“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது”

🕔 September 3, 2023

ரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்கள் மீது வரிச்சுமையை திணித்து – மக்களை ஒடுக்குவதே இந்த விலை அதிகரிப்புக்கான ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு லீற்றர் எரிபொருளில் இருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகுஎண்ணை விலையில் அதிகரிப்பு ஏற்படாத நிலையைில், டொலரில் மாற்றம் இல்லாத வேளையில் – எவ்வாறான விலை சூத்திரத்தை பயன்படுத்தி விலையை அதிகரிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளதெனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்