கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (28) நாளை மறுநாள் (29) மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
எசல பெரஹெராவுக்கன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தமையினை அடுத்து, கடந்த 18ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்ட விடுமுறை இன்று (27) நிறைவடைகின்றது.
அந்த வகையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் பாடசாலைகளும் நாளை மீண்டும் தொடங்கவுள்ளன.