தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு

🕔 August 27, 2023

த்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக் காட்டியதாக கேகாலையைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனக புஷ்பகுமார என்ற நபர், இவ்விவகாரம் குறித்து இரண்டு தொலை்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவித்ததாகவும், ஆனால் சனிக்கிழமை (26) மாலை வரை அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு படத்தை எடுத்து எந்த சரிபார்ப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர் என, குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகள் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த நபர் கூறினார்.

ஹிரு மற்றும் சுவர்ணவாஹினி ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளே, இவ்வாறு தனது படத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்