அனுர குமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி கடிதம்

🕔 August 22, 2023

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை அனுப்பியுள்ளார்.

அண்மையில் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்த கருத்து ஒன்று தொடர்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் நாடாளுமுன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியிடம் தன்னை அவமானப்படுத்தியமைக்கு, மான நஷ்டஈடாக அனுர குமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

மத்திய கொழும்பில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 19) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் குட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்கு அமையவே இந்தக் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அனுர குமார திஸாநாயக்க மோல்டாவில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்