நாமல் – லிமினி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை கிடைத்தது

🕔 August 15, 2023

நாமல் ராஜபக்ஷவுக்கு இரண்டாவது குழந்தை கிடைத்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்திருக்கிறார்.

‘நான்கு பேரைக் கொண்ட எங்கள் குடும்பத்துடன் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது’ என, அவர் தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையெனும் பொறுப்பு இரண்டாவது முறை கிடைத்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அது முதல் முறையை விடவும் அதிகமானது எனவும் அவர் மேலும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு முதல் குழந்தை கிடைத்தது. நாமல் மற்றும் லிமினி ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி திருமணமானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்