திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

🕔 January 25, 2016

Ronaldinho - 0222திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார்.

இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொனால்டினோ, இன்று திங்கட்கிமை மாலை பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், அவருடைய காரில் வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது,  ரொனாட்டினோவின் காருக்கு மிக சமீபமாக அங்கிருந்த வீதிச் சமிக்ஞைக் கம்பம் திடீரென சரிந்து விழுந்து.

இதனால், ரொனால்டினோ உட்பட அங்கிருந்தவர்கள் ஒருகணம் அதிர்சியடைந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும்,  சற்று நேரத்தில் ரொனால்டினோ புன்னகைத்தவாறு தன்னை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு அவரின் கார், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான ரொனால்டினோ, முன்னாள் பிரேசில் அணி வீரர் ஆவார். உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் அணிக்கு பல வெற்றிகளை இவர் பெற்றுக் கொடுத்துள்ளார். பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர்களான ரொமாரியோ, ரொனால்டோ போன்று ரொனால்டினோவும் பிரபலமானவராவார்.

Comments