சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
‘தேசபந்து தென்னகோன் என்ற பெயரில் பராமரிக்கப்படும் எனது முகநூல் பக்கத்தை யாரோ அனுமதியின்றி அணுகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த முகநூல் பக்கத்தின் ஊடாக எந்த ஒரு தகவலையும் பதிவிடமாட்டேன் என்றும் அதற்கு பதிலளிக்கவும் மாட்டேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெக் செய்யப்பட்டுள்ள அவரின் பேஸ்புக் கணக்கை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இணையக் குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.