13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

🕔 August 13, 2023

ரசியலமைப்பின் 13வது திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தருணம் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சண்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் குறித்த இந்த தீர்மானத்துக்கு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தக் கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த பக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பலவீனமான பொருளாதார சூழ்நிலையில் அரசாங்கம் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், 13வது திருத்தத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சித்தால் நாடு தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

அரசாங்கம் வலுவான பொருளாதார நிலையில் இருக்கும் போது, 13ஐ மேலும் விரிவாக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என்று அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்