நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது

🕔 January 25, 2016
Rajinikhanth - 0987தென்னிந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் உயர் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்த வருடம் பெறுவோரின் பெயர்களை இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை மாலை அறிவித்தது.

இதன்போதே, நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண், மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று ரஜினிகாந்த், தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்