நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின

🕔 January 25, 2016
Namal Rajapaksa - 0986னது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யும் வகையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில், ரகசிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம் பெற்றபோது, இந்த முறையீட்டினை நாமல் தெரிவித்தார் என, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்றும், சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்தான் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சந்திப்பின்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டு விட்டதாகவும் நாமல் ரரஜபக்ச மைத்திரியிடம் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தம்முடன் இணைந்து செயற்பாடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு நாமல் ரரஜபக்ஷ, ஆதரவு தருவதாக கூறினார் என்றும், குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்