ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

🕔 January 25, 2016

Kalpana - 087டிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார்.

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாவர்.

பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோருடன் இணைந்து ‘சதிலீலாவதி’ படத்தில் நடித்தார்.

மிக அண்மையில், ‘காக்கி சட்டை’  திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா வேடத்தில் கல்பனா நடித்திருந்தார். தமிழில் அவருடைய நடிப்பில் வெளியான கடைசி படம் ‘காக்கி சட்டை’ ஆகும்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த போது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது இருக்கு 50 வயதாகும்.

மலையாளத்தில் வெளிவந்த ‘தனிச்சல என்ஜன்’ என்ற படத்துக்காக, 2012 ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகை்கான தேசிய விருதினை இவர் பெற்றிருந்தார்.

மலையாள இயக்குநர் அனில் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு, விவாகரத்துப் பெற்று பிரிந்து சென்றனர். இவருக்கு ஸ்ரீமாயி என்கிற மகளொருவர் உள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்