எம்ஒபி உரத்தின் விலை நாளை தொடக்கம் குறைகிறது
![](https://puthithu.com/wp-content/uploads/2023/06/Paddy-03-1024x683-1.jpg)
எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு எனப்படும் உரத்தின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 50 கிலோகிராம் எடையுள்ள எம்ஒபி உர மூடையின் விலையினை 1000 ரூபாயினால் குறைக்கவுள்ளதாக விவசாச அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதற்கமைய ஒரு மூடை எம்ஒபி உரம் – 14 ஆயிரம் ரூபாவுக்கு நாளை தொடக்கம் விற்கப்படவுள்ளது.