துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

🕔 July 12, 2023

துருக்கிய யுவதியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த யுவதியே இவ்வாறு தொல்லைக்கு ஆளானார்.

சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, சந்தேகநபர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் உடலை தடவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பாகிஸ்தானிய இளைஞன் – நடத்துனர் மற்றும் பயணிகளின் உதவியுடன் சந்தேக நபரை பிடித்து தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்