இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

🕔 July 8, 2023

லங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் – பணியகத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு சென்றிருந்ததாகவும், முக்கியமாக கட்டார், குவைத், சஊதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ருமேனியாவுக்கும் ஜப்பானுக்கும் அதிகப்படியான வௌிநாட்டு தொழிலாளர்கள் செல்கின்றனர். 

மொத்தத்தில் இலங்கையர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. 

திறன்சார் தொழிலாளர்களை (Skilled laborer) வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்ப எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்