தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

🕔 July 5, 2023

னது காதலியுடன் பம்பலப்பிட்டியில் காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி – பணம் மற்றும் 160,000 ரூபாய் பெறுமதியான வெள்ளைத் தங்க நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தனது காதலியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சந்தேக நபர், வெள்ளைத் தங்க நெக்லஸ் மற்றும் 03 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாக பம்பலப்பிட்டி பொலிஸில் திங்கட்கிழமை மாலை முறைப்பாடு செய்யப்பட்டது.

சந்தேக நபர் முதலில் பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என நாடாமன்ற உறுப்பினரின் மகன் கூறியதையடுத்து, சந்தேக நபர் தனது இடுப்பில் இருந்த கத்தியை வெளியே இழுத்து எம்.பியின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார்.

அதன்போது வெள்ளை தங்க நகை மற்றும் காரின் டேஷ்போர்டில் இருந்த பணப்பையிலிருந்து 03 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அவர் கொள்யைிட்டுள்ளார்.

சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்படுவார் எனவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்