உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட வாக்கெடுப்பில் தந்தை , மகன் நழுவல்
அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், ராஜபக்ஷ குடும்பத்தினரில் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாக தெரியவருகிறது.
குறித்த வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை (01) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இந்த வாக்கொடுப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் சபையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் ராஜபக்ஷவினரில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மட்டுமே கலந்துகொண்டதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லை என – ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் நாடாளுமன்ற செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.