ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது

🕔 July 4, 2023

‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ட்விட்டர் சமூக வலைத்தளம் போன்ற செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் ‘த்ரெட்ஸ்’ (Threads) எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும்.

பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க் வாங்கினார்.

இதனையடுத்து சந்தா செலுத்தினால்தான் பிரத்தியயேக சேவைகள் கிடைக்கும் என்று ட்விட்டர் அறிவித்தது. இது பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக்குள்ளானது.

மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவுகளை பார்க்க எலன் மாஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டரின் உரிமையாளரான எலான் மாஸ்க் ஆகியோருக்கு இடையேயான கருத்து மோதலுக்கு மத்தியில் Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்