இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது

🕔 July 4, 2023

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த சீன விமான நிறுவனமான ‘ஏர் சைனா’ (Air China), நேற்று தொடக்கம் தனது சேவையை இலங்கைக்கு மீண்டும் ஆரம்பித்தது.

142 பயணிகள் மற்றும் ஒன்பது விமானக் குழு உறுப்பினர்களுடன் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை ‘எயார் சைனா’ விமானம் வந்தடைந்தது.

சிசிஏ – 425 என்ற விமானம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 08.20 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.

‘ஏர் சைனா’ விமான சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவிலிருந்து இரவு 08.55 மணிக்கு இலங்கையை வந்தடையும் என்றும், அதே விமானம் அதே நாட்களில் சீனாவின் செங்டுவுக்கு இரவு 10.15 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong), சீன தேசிய விமான நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய முகாமையாளர் ஷுய் ஜன் (Shui Jun) உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்