லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

🕔 June 29, 2023

ரச ஊடக நிறுவனங்களான லேக் ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட்) மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இரண்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ரூபாவாஹினி கூட்டுத்தாபன தலைவர் டப்ளியூ.பி. கனேகல நேற்று (28) தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து லங்காபெல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரசாத் சமரசிங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் எனவும்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இவர்கள் இருவரும் அமைச்சர் பந்துல குணவர்தனவின் நெருங்கிய நண்பர்களாவர்..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்