ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு
ஹஜ் பெருநாளையடுத்து சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளைமறுதினம் (30) வெள்ளிக் கிழமையன்றும் விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை (29) ஹஜ் பெருநாள் இலங்கையில் கெண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் 30ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பதிலீடாக, ஜுலை 8ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.