அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை

🕔 January 22, 2016

Medical camp - 0987
– அஷ்ரப் ஏ. சமத் –

ம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன்  மேற்படி இலவச மருத்துவ முகாம், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

இதன் அடிப்படையில் காலை 09 மணி முதல் மாலை 04 மணிவரை;

* ஜனவரி 25ம் திகதி நிந்தவூர் மதீனா பாடசாலை.

* ஜனவரி 26ம் திகதி அட்டளைச்சேனை அறபா வித்தியாலயம்

* ஜனவரி 27ம் திகதி சம்மாந்துறைஅப்துல் மஜீட் நகர மண்டபம்

* ஜனவரி 28ம் திகதி மகாஓய சனசமுக மண்டபம்.

ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளன.

அட்டளைச்சேனையில் நடைபெறும் மருத்துவ முகாமில் கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சகல வைத்திய சேவைகளையும் கொண்ட மேற்படி மருத்துவ முகாமுக்கு ஜரோப்பிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வைத்திய குழுவினர்கள் வருகை தரவுள்ளதுடன், இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த வைத்திய முகாமில், அந்தந்த பிரதேச நோயாளிகள்  கலந்து பயன்பெறுமாறு பிரதி சுகாதார அமைச்சா் பைசால் காசீம் வேண்டியுள்ளாா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்