நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

🕔 June 7, 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் குறிப்பிட்டார்.

“பொலிஸார் கடமையைச் செய்வதை எம்மால் தடுக்க முடியாது” எனவும் சபாநாயகர் இதன்போது கூறினார்.

கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் சித்தாந்தங்களுடன் எமக்கு உடன்பாடில்லை. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வந்து கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்