பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி

🕔 June 7, 2023

வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர்.

பட்டமளிப்புக்கான ஆடையுடன் இருந்த மாணவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட மற்றொரு பட்டமளிப்பு ஒத்திவைக்கப்பட்டதோடு, புதன்கிழமை அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்கள் பட்டதாரி வகுப்பைச் சேர்ந்த 18 வயது இளைஞரும், அவரின் 36 வயது தந்தையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபர் கைத்துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு முதலில் தடுத்து வைக்கப்பட்டார், ஆனால் அவர் தாக்குதலில் ஈடுபடவில்லை என பொலிஸார் தற்போது நம்புகின்றனர்.

வேஜினியா ‘கொமன்வெல்த்’ பல்கலைக்கழக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்