மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா

ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே, மேற்படி விடயத்தினை கோட்டா தெரிவித்தார்.
நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் குறித்தும் இதன்போது அவர் வலியுத்தினார்.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, புதிய எதிர்க்கட்சி அரசியல் முன்னணியினை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் பங்கு இந்த முன்னணியில் இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விமல்; அது தொடர்பில் தெரிவிப்பதற்கு நேரம் வரவில்லை என்று கூறினார்.