எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது

🕔 May 31, 2023

ரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) தொடக்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீட்டர்15 ரூபாவினால் குறைகிறது. இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும்.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும். இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாய்களாகும்.

லங்கா சுப்பர் டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 340 ரூபாயாகும்.

இந்தநிலையில், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 50 ரூபா குறைக்கப்படவுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாயாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாயாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்