தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (31) காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமான இவருக்கு 42 வயதாகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
வேலை நிமித்தமாக வீட்டுக்கு வந்த ஊழியர் ஒருவர் – பிரதேச செயலாளரின் சடலத்தைக் கண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.