இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது

🕔 May 22, 2023

லங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், சீனா மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சினொபெக் (Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd) நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினொபெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தட்பட்டது.

இதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் பரிந்துரைகளை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

சீனாவின் சினோபெக், யுனைடெட் பெட்ரோலியம் ஒஃப் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்கள், இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தையில் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளதாக – ஏப்ரல் மாதம் அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் 20 வருடங்கள் செல்லுபடியாகும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும், அதேவேளை, இந்தத் திட்டத்தின் கீழ் குறித்த நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 150 எரிபொருள் நிலையங்களும் வழங்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்