மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

🕔 May 15, 2023

ஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பொதுஜன பெரமுன விளக்கமளித்துள்ளது.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற – ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அடிப்படையற்ற தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்