தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

🕔 January 21, 2016

Asad saali -07க்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர், மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரோசி மற்றும் பொன்சேகா தரப்புக்களிலிருந்து மேற்படி பதவியினைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும், சுவிட்ஸர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.கவின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் நாடு திரும்பிய பின்னரே இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்படுமென ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குணவர்தனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு ஆசாத் சாலி, உபுல் சாந்த சன்னஸ்கல மற்றும் எரங்க வெலியங்ககே ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்