இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

🕔 May 11, 2023
உச்ச நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டபோது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (09) துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவரின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கலகம் மூண்டது.

கடந்த ஆண்டு பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி நபராக இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஏழாவது முன்னாள் பிரதமர் இவராவார்.

இந்த நிலையில் இம்ரான் கான் இன்று உச்ச நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவரின் கைது சட்ட விரோதமானது என, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்