தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லலாம்: அமைச்சரவை அனுமதி

ல் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களிலுள்ள நிறுவனங்களுக்குச் சென்று பணியில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த அனுமதி மூலம் – குறித்த அரச ஊழியர்கள் தாம் போட்டியிடும் வட்டாரம் தவிர்த்து, வேறு வட்டாரங்களிலுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.