புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு

🕔 April 15, 2023

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் – ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது.

அந்த வகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை பட்டாசு பயன்பாடு குறைவு என்றும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்