அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர்

🕔 March 16, 2023

ரசிடமிருந்து நலன்புரி நன்மைகளை பெறுவதற்காக, 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன எனறு, நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 31ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு முடிவடைவதால், அதற்கு முன்னர் – சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் ராஜாங்க அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்