மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

🕔 March 15, 2023

ள்ளூராட்சி சபைகளின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, “உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச்19ஆம் திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் முடிவுறுத்தப்படும்

அத்துடன் , அவற்றின் நிர்வாகம் நகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களின் கீழ் வரும்” என ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கூறியுள்ளார்.

மார்ச் 19ஆம் திகதிக்குப் பின்னர் – உள்ளூராட்சி நிறுவனங்களால் சீர்திருத்த நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்