மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

🕔 March 8, 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) தற்காலிகமாக 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது.

2023 ஏப்ரல் 20 முதல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் தனது கட்சிக்காரர் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், அவர் மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான், மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்