பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு

🕔 March 7, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என, அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துதிருந்தார்.

இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தும் வகையில், அமைச்சரவை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இருந்தபோதிலும், ‘சிலோன் டுடே’ ஊடகம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைக்கு (ஆர்.ரி.ஐ) கிடைத்த பதிலின் அடிப்படையில், அமைச்சரவையின் செயலாளர் எம். கொடிப்பிலி ஆராச்சி, ஜனவரி 10ஆம் திகதி, தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் எனும் அமைச்சரவைத் தீர்மானத்தை தெரிவித்து – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது அம்பலமாகியுள்ளது.

நாடாளுமன்றில் இந்த விடயத்தை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்