ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

🕔 March 1, 2023

ழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.

சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (27) வேனில் வந்து சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்துக்குள் நுழைந்து திருடியுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பண்ணை உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன் சந்தேக நபர்களைப் பிடித்துள்ளார்.

பிடிபட்ட சந்தேக நபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்டவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்