இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம்

🕔 February 27, 2023

– அஷ்ரப் ஏ சமத் –

லங்கை மலாயர் சங்கத்தின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் நேற்று ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள, இலங்கை மலாயர் கிறிக்கற் மைதாணத்தில் வெகு விமர்சையாக  நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்தோனோசிய துாதுவா் தேவி குஸ்ட்டினா ஆகியோர்கள் கலந்து கொண்டு மலாய கலாச்சார நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தணர்.

இந் நிகழ்வில் மலாய சமூகத்தின் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு – அச் சமூகத்தின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் மேடையேற்றபட்டன.

இதில் அரங்கேற்றப்பட்ட சிறந்த நிகழ்ச்சிகளுக்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள மலாயர் சமுகத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்