சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின

🕔 February 22, 2023

ட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைப்பற்றினர்.

20 அடி கொள்கலனில் இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கன்டெய்னரில் 20,250 கிலோ எடையுள்ள 1,294 துணி சுருள்கள் உள்ளன என்று சுங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்கலன் துபாயில் இருந்து துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சீனாவில் பொருட்கள் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்கலனின் எடை உள்ளிட்ட விடயங்களில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சோதனையின் போது, 2,999,400 சிகரெட்கள், துணி சுருள்கள் 38 (8,419 கிலோ), அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த கொள்கலன் கொழும்பு 15 இல் உள்ள அலுவலகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்