இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

🕔 January 17, 2016
Postal votes - 01ள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவை, இந்த ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட உள்ளது.

நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று, இந்த ஆண்டினுள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக இந்த யோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அதனை நிறைவேற்றி அதனைத் தொடர்ந்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்படுவது, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என அரசாங்கம் கூறியுள்ளது.

பெரும்பாலும் ஜூன் மாதத்துக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்