இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு

பேருவலை இரத்தினக் கல் வியாபாரியிடமுள்ள நீலக் கல்லானது, இரத்தினக்கல் வகையைச் சாராது என்று, கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனத்தின் பிரதான நிபுணர் அசான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற இரத்தினக் கற்களில் தம்மிடமுள்ளதே மிகவும் பெரியதாகும் என்று, பேருவலையைச் சேர்ந்த இரத்தினைக்கல் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையிலேயே, இரத்தினக்கல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்படி பேருவலை இரத்தினைக்கல் வியாரிக்கு 480 கிராம் எடை கொண்ட கருநீலமான,மேற்படி கல், சில மாதங்களுக்கு முன்னர் கிடைத்தது.
தம்புல்ல – எலஹெர பிரதேசத்தில் இந்த கல் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் தம்மிடமிருப்பதாக, ரத்தினபுரியைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் அறிவித்துள்ளதுடன், குறித்த கல்லை 300 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.
