ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

🕔 February 11, 2023

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (11) காலை, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்த நிலையில், மேற்படி யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்