வெல்லவாய பகுதியில் சிறயளவில் நில அதிர்வு

வெல்லவாய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
03 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.