நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம்

🕔 February 9, 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகஹ்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பௌசி நியமிக்கப்பட்டு்ளளார்.

முன்னாள அமைச்சர் பௌசிக்கு தற்போது 85 வயதாகிறது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஜிபுர் ஹ்குமான் பதவி விலகியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கொழும்பில் முஜிபுர் ரஹ்மானுக்கு அடுத்ததாக – அதிக வாக்குகளை பௌசி பெற்றார்.

இதன்படி, முஜிபுர் ரகஹ்மான் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு – அப்துல் ஹமீட் மொஹமட் பௌசியின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்