லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

🕔 February 6, 2023

ரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 5,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை, சந்தையில் 5080 ரூபாவாக காணப்பட்டது.

அவ்வாறே, 5 கிலோகிராம் லாஃப்ஸ்  எரிவாயுவின் 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன் புதிய விலை 2112 ரூபாவாகும்.

அத்துடன், 2 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையும் 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்  அதன் புதிய விலை 845 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையை லிட்ரோ 334 ரூபாவினால் அதிகரித்தது.

இதற்கமைய அதன் புதிய விலை 4743 ரூபா ஆக உள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலையை விடவும், அதே எடையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 537 ரூபா அதிகமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்