13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

🕔 February 5, 2023

ரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி வெளியிட்டார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தான் பிரிவினைவாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் எனத் தெரிவித்தார்.

“பிரிவினைவாதம் நாட்டில் அமைதியை அன்றி போருக்கே வழிவகுக்கும். பிரிவினைவாதம் ஏதேனும் ஒரு சிறிய நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது பிரச்சினைகளை உருவாக்கும்.

இதேபோன்ற நடைமுறை உலகின் பல இடங்களிலும் தாராளமாக பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. பிரிவினைவாதம் உள்ள இடமெல்லாம் போர் நடந்துள்ளது. அந்த நாடுகளில் அமைதி இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, “நான் பிரிவினைவாதத்தை மிகவும் எதிர்க்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்