இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

🕔 February 2, 2023

லங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு, இந்த வரிசைப்படுத்தலை ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) மேற்கொண்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு போன்றவை வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் பிரதி பலிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின் படி, உலகளவில் கொழும்பு பல்கலைக்கழகம் 1468ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதேவேளை, மேற்படி தரவரிசையின் படி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கடைசி இடத்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. உலகளவில் 7710ஆவது இடம் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்