தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மற்றொரு முயற்சி குறித்து தகவல்

🕔 January 30, 2023
Person voting

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைப்பதற்கான யோசனையொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது இந்த யோசனை முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது.

நிதியமைச்சினால் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் உள்ள சிரமம், தேர்தலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம், தேர்தலின் போது ஆற்றல் மற்றும் அதிகாரம் வழங்குவதில் சிரமம், இளைஞர் பிரதிநிதித்துவத்தை 30% ஆக அதிகரிப்பது உள்ளிட்ட பல காரணங்கள் முன்வைத்து, தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பிரேரணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் திறந்த நீதிமன்றில் சமர்ப்பித்து, தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலை ஒத்திவைக்குமாறு கோருவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்