பொது நிகழ்வில் தோன்றினார் கோட்டா: பதவி விலகிய பின்னர், முதல் சம்பவம்

🕔 January 27, 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலயத்தில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.

கோட்டா பதவி விலகிய பின்னர் கலந்து கொண்ட பொது நிகழ்வு இதுவாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுடன் கோட்டாபய ராஜபக்ஷ உரையாடும் படம் வெளியாகியுள்ளது.

கோட்டாவின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

அதன் பின்னர் அவர் பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்