இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் தொடர்பில் தகவல்
இலங்கையில் தனியார் துறையை விடவும் அரச துறையில் அதிகளவு பெண்கள் பணியாற்றுவதாக, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் அரச ஊழியர்களில் ஆண்களின் தொகையை விடவும் பெண்களின் தொகை குறைவாகவே உள்ளது.
அரச துறையில் ஆண்கள் 53 வீதமும் பெண்கள் 47 வீதமும் பணியாற்றுகின்றனர்.
மறுபுறமாக தனியார் துறையில் 71 வீதம் ஆண்களும், 29 வீதமான பெண்களும் பணியாற்றுகின்றனர் எனவும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சனத்தொகையில் பெண்கள் சுமார் 52 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.